தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தொப்புள் கொடி

த.சரீஷ்
என்னால் அவளைப்போல் !
நடந்துகொள்ள முடிவதில்லை. !
இருப்பினும்... !
இதை அவளிடம் !
சொல்லிக்கொள்வதும் இல்லை..! !
உள்ளங்காலில் அடிபட்டால் !
உச்சந்தலைவரை வலிக்கிறது !
அவளுக்கு. !
காயங்கள் குறித்த !
வேதனைகளை !
என்னைவிட அவள்தான் !
உணர்ந்துகொள்வது அதிகம். !
இது ஒரு !
உயிருள்ள உறவு தொடர்பான !
உணர்வின் வெளிப்பாடென்று !
எங்களில்... !
இதுவரை பலர் !
விளங்கிக்கொள்வதில்லை. !
பாசத்தின் கோடுகளையும் !
மனிதத்தின் அடையாளத்தையும் !
இதயத்தின் சத்தங்களையும் !
கன்னத்தின் காயங்களையும் !
உணரமுடிகின்ற குறியீடாகத்தான் !
இன்னும் அவள். !
தாலாட்டுப்பாடி !
சமாதானமாகப்பேசி !
ஒருவழியாக... !
உறங்கவைத்த பின்பும் !
காயம்பட்ட !
குழந்தையின் அழுகுரல்கேட்டு !
இதோ வருகிறேன் என !
குரல்கொடுத்தபடியே !
பக்கத்து அறையிலிருந்து !
பதறிக்கொண்டு ஓடிவருகிறாள். !
இப்படித்தான்... !
எங்களின் கதறல்கள் கண்டு !
தாங்கமுடியாமல் !
பக்கத்துநாட்டிலிருந்தும் !
பல இதயங்கள் !
எங்களுக்காகவே உரத்தகுரலில் !
பேசிக்கொண்டிருக்கின்றன என்பது !
இன்னும்... !
எத்தனைபேருக்கு தெரியும்...? !
--- த.சரீஷ் !
03.02.2006 (பாரீஸ்)

சாத்தானின் கரங்கள்

ப.மதியழகன்
சாத்தானின் கொடிய கரங்களில்!
பூந்தளிர்கள் அகப்பட்டன!
மனிதமற்ற மிருகத்தின் செய்கைகள்!
மிகக் கொடியதாக இருந்தன!
இன்னும் மலராத மொட்டுக்களை!
காமுகர்கள் கசக்கி எறிந்தனர்!
பால்யம் மாறாத முகங்களில்!
பீதி குடிகொண்டது!
கள்ளங் கபடமற்ற!
வெள்ளை உள்ளத்தில்!
உதிரத்தின் ரேகைகள் பதிந்தன!
வேட்டையாடுதலைப் போலே!
மனித உருவில் விலங்குக் கூட்டம்!
விரும்பியே செய்யும் காரியமிது!
பிள்ளைப் பிராயத்தில்!
சித்ரவதை அனுபவிக்கும் வேதனை!
அக்குழந்தையின் பால்யத்தை!
பறித்துவிடும்!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்!
நிகழ்வின் சுவடு மட்டும்!
வடுவாக மனதில் தங்கிவிடும்!
குற்றவுணர்ச்சி சிறிதுமற்ற!
ஈனப்பிறவியின் செய்கைகள்!
சமுதாயத்தை முற்றிலுமாய்!
சீரழித்துவிடும்!
இனி என்றென்றும்!
விழிப்போடு இருப்போம்!
அவர்களுக்கு அன்றன்றே!
தண்டணையைக் கொடுப்போம். !
(பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் குழந்தைகளுக்காக)

வேடிக்கைக் மனிதரங்கே

புஸ்பா கிறிஸ்ரி
நாட்டில் அவலமங்கே!
ரோட்டில் வாருங்கள்!
போராடிக் காத்திடுவோம்!
வாதாடிச் சமர்புரிவோம்!
மாணவர் சமூகமிங்கே!
மண்டியிட்டுக் கேட்டுநிற்க!
வீட்டுச் சோறுதின்று!
ஏப்பமிட்டு இடைபெருத்து!
கூச்சலிட முடியாதென்று!
காச்சலென்று பொய்சொல்லி!
நாடகமாடி நடித்திடும்!
வேடிக்கை மனிதர்களுமிங்கே!
வீதிக்கு வந்து எங்கள்!
பாதையை மறைத்து நீங்கள்!
சாலை மறியல் செய்யாது!
காலையே ஊர்போங்கள்!
கனடா எம் நாடென்று!
கனமாய் கூறும் கூட்டமொன்று!
அரசியல் லாபம் தேடும்!
அதிகார வர்க்கங்களூம்!
பழிபாவமென்று வாய்மூடி!
தனிமையாய் விட்டிட!
தடியடித்திடும் போலிசும்!
வேடிக்கை மனிதர்களே!
நாதியற்றவர்களாய்!
நல்லவன் வழிசென்று!
வாழ்வோம் என்றோரு!
நம்பிக்கை கொண்டிங்கு!
வாழும் மாணவர்கள்!
உண்வை, உடையை!
உறக்கத்தை மற்நது!
தயக்கமின்றி மயக்கமின்றி!
தன்னம்பிக்கை உணர்வுடன்!
தேடிக்கிடக்கின்றார் வீதிகளில்!
அவர் பின்னே நாமும்!
வேடிக்கை மனிதர்களே!
விடியலொன்று வேண்டுமென்று!
வேதனை மனத்துடனே!
மரணத்து பயத்துடன்!
அரக்கரது மிரட்டலுடன்!
வாழ்க்கையை வெறுத்துத்!
தாழக்கையை பதித்து!
குறுகிய வாழ்வைத் தேடி!
குறுக்கப்பட்ட மக்களிவர்!
நச்சுப் பாம்புகளிடம்!
பிச்சை கேட்டுக் கையேந்தி!
எச்சிலான மனிதரது!
துயரமும் வேடிக்கைதானோ?

காதலாகிறது

நீதீ
ஒவ்வொரு முறை!
அவள் அனிச்சையாய்!
திரும்பும் போது!
என்னை நோக்கியோ?!
எண்ணிக் கொண்டு!
சிறு புன்முறுவலை!
சொல்லத் தெரியாமல்!
சொதப்பிக் கொண்டு!
ஊடுறுவும் என் பார்வை!
எனக்குள்ளே காதலாகிறது!
கல்லூரி நாட்களை!
கடத்தும் வரை!!
எழுத்து: நீ “தீ”!
தொடர்புக்கு:006582377006!
!
இடைவெளி...!
!
வாரமொருமுறை!
காகித மடலாக!
நினைக்கும் போதெல்லாம்!
தொலைபேசி அழைப்புகள்!
நிமிடத்திற்கு ஒரு!
குருந்தகவல்!
உறவுமுறை ஜனங்களின்!
விசனப்பட்ட விசாரிப்புகள்!
பார்க்கும் இடம் எல்லாம்!
தோன்றி மறையும்!
காட்சிப் பிம்பங்கள்!
இரவின் து£க்கத்தில்!
புன்னகை முனகலாக!
அசைபோடும் மனது!
இதயத்தில் பாரமாய்!
இடைவெளியின் சுகம்!
எழுத்து: நீ “தீ”!
தொடர்புக்கு:006582377006

ஒப்பனை உறவுகள்

கண்டணூர் சசிகுமார்
நான் மட்டுமல்ல!
நம்மில் பலரும்!
நம்மோடு சிலரும்!
ஒப்பனையாகவே!
உலாவிக்கொண்டிருக்கிறோம்!
இதயத்தில் பெருவலி!
இருமுறையான போதும்!
இருக்கின்ற ஒருமகளை!
இணைகரம் சேர்த்திடவே!
ஒப்பனையாய் உதடுகளில்!
ஒன்றுமில்லை நலம்தான்….!!!!!
நாளுக்கு நாள்மாறும்!
நாகரீகச் சாக்கடையில்!
இதயத்தைக்கிழிக்கும்!
இன்பத்தை மறைத்து –(மனதில்)!
கொண்டவளை தோழியென!
உறவுக்குச்சொல்லிவிட்டு!
உறவான உறவுகள்!
எத்தனை ??? எத்தனை ???!
நான் மட்டுமல்ல!
நம்மில் பலரும்!
நம்மோடு சிலரும்….!
ஒத்தையான ஒருமகளின்!
ஒத்தைக் கல்காதணியும்!
அடமானம் ஆகிடாது!
அடிவயிற்றுப் பெருவலியை!
அடைகாத்(த)து கோழிபோல!
ஒப்பனையாய் உதடுகளில்!
ஒன்றுமில்லை நலம்தான்….!!!!!
இப்படியாக சிலபேர்….!
இன்னும் பலபேர்….!
ஆக்கம்: கண்டனூர் சசிகுமார்

எல்லாம் .. ஆயுதம் .. பொசுக்கிடாதே

செண்பக ஜெகதீசன்
எல்லாம் பிடிக்கும்.. ஆயுதம் ஒன்றுதான்.. !
பொசுக்கிடாதே..!
01.!
எல்லாம் பிடிக்கும்…!
---------------------------!
எல்லா கட்சிகளும் பிடிக்கும் !
இவர்களுக்கு- !
கொடுக்கும் கூலிக்குக் !
கொடிபிடிப்பவர்கள், !
கழுதைகளுக்கும்தான்- !
கட்சி பேதமின்றி !
போஸ்டர் !
கடித்துத் தின்பதால்…!!
!
02.!
ஆயுதம் ஒன்றுதான்…!
--------------------------!
உளி- !
கருவி ஒன்றுதான், !
அதை வைத்து- !
உழைப்பவன் !
வியர்வை சிந்தினால் !
விளைவது !
கலை, !
இரத்தம் சிந்தினால் !
விழுந்தது !
கொலை…!!
!
03.!
பொசுக்கிடாதே…!
---------------------!
சின்னக் குழந்தையின் !
சிரிப்பைப் பார், !
சிங்காரக் காலடி வைக்கும் !
சின்ன நடையைப் பார், !
சிணுங்கல் மழலைச் !
சிறப்பைப் பார், !
அதுமட்டும் வேண்டாம்- !
அச்சுறுத்த வேண்டாம்.. !
அழுதால் !
அம்புலி காட்டு, !
நம்பிக்கையை !
நல்லதாய்க் காட்டு…! !
வளரும் குழந்தை !
நெஞ்சத்தில் வஞ்சத்தையும் !
அஞ்சிச்சாக அச்சத்தையும் !
கொஞ்சமும் கொடுக்க வேண்டாம்.. !
நஞ்சாக்க வேண்டாம் !
நல்ல குழந்தை மனத்தை, !
கெஞ்சிக் கேட்கிறேன்- !
பிஞ்சிலே பொசுக்கிடவேண்டாம் !
பிள்ளைப் பயிர்களை…!!
!
-செண்பக ஜெகதீசன்

அப்பா..! ஆழ்ந்த அர்த்தம்

நவா நடா
அம்மாவின் அழுகை!
உரக்க ஒலித்துக்கொண்டிருந்தது!!
அண்ணன்மார் வருகையால்!
எழுந்த சத்தம் வானைகிழித்தது!!
மரணவலி அறிந்திராத எங்கள்!
வீட்டு மழலைகள் திக்குமுக்காடினர்!!
சந்தோஷத்தை மட்டுமே பார்த்திருந்த!
எனது விழிகள் நீரோடையாய் பாய்ந்தது!!
சத்தம் போட்டு சிரிப்பலைகள் கேட்ட வீடு!
சாவு மேளங்களின் சத்தங்களால் முழங்கின!!
சொந்தங்களால் வீட்டின் வாசல்வரை!
நிரம்பி வழிந்தது!!
சாவு செய்தி கேட்டு வந்தார்களாம்?!
அட கடவுளே..!!!
எங்கள் வீட்டு முற்றத்தில்..?!
எனது அப்பாவின் சடலம்..!!!
நெஞ்சில் நெருப்புடனும்!
கண்களில் நீருடனும்!
உதடுகளில் வெம்பல்களுடனும்!
அனுப்பிவைத்தோம் அப்பாவை.!!
எங்கள் வீட்டு தெய்வத்தை..!! !
-நவா நடா

கண்ணீர் துளிகள்

ச இரவிச்சந்திரன்
வயதோ பதினான்கு !
வயதுக்கு மீறிய வளர்ச்சி !
உடலில் மட்டுமல்ல எண்ணங்களிலும் தான் !
வாழ்க்கை என்றால் !
என்னவென்றே தெரியாத அந்த !
வயதுக்கு வராத சிறுமிக்கு !
வாழ்க்கை பிரச்சினை !
வழக்காக வந்தது !
வழக்காட வந்தாள் !
வழக்கு மன்றத்தில் வழக்கறிஞர்கள் !
வாழ்க்கையை வழக்காக பார்க்கும் !
வல்லமை படைத்த வல்லுனர்கள் !
வாழ்வின் பெரும்பகுதியை !
வழக்குகளோடு கழித்த !
வயதான நீதிபதி !
வந்தார் அமர்ந்தார் அவள் !
வழக்கை கேட்க ஆயத்தமானார் !
வார்த்தைகளா அவைகள் ? !
வதைபட்டு சிதைவுற்று காயம்பட்ட !
மனம் அள்ளி தெரித்த நெருப்பு கணைகள் !
எனக்கு எட்டு வயதிற்குள் !
எல்லா அசிங்கங்களும் தெரிந்து விட்டது !
காதலோ பத்து வயதில் !
கலர் கலராய் வானவேடிக்கை காட்டியது !
கட்டி பிடித்து தரும் முத்தம் என் !
கனலை கூட்டியது பதினோராம் வயதில் !
ஓடி போகலாம் வாழ்க்கை நடத்தலாம் என்பதை !
ஓராண்டுக்கு முன் தெரிந்து கொண்டேன் !
இதனையும் சொல்லி தந்த !
ஆசான் கள் யார் தெரியுமா? !
தான் வாழும் சமுகத்தை !
தரங்கெட்ட நரகமாக்கும் !
இன்றைய எழுத்து வேந்தர்களும் !
இயக்குனர் செம்மல்களும் தான் !
திரைப்படங்கள் என்னை !
தடம் புரள சொன்னது !
காமத்தில் கரை காண தூண்டியது !
தொலைகாட்சி நாடகங்களோ என்னை நானே !
தொலைத்துக் கொள்ள வழிகாட்டியது !
வாழ்க்கை தொடங்குவதற்கு முன்பே !
வயிற்றில் மூன்று மாத கரு !
கருவைச் சுமந்தவளாய் நான் !
களங்கப்பட்டவளாய் நான் !
களங்கப்படுத்தியதோ !
காமத்தை அறியாத விடலைசிறுவன் !
அகவை பதினாறுக்குள் !
கற்பழிப்பு வழக்கை அவன் மேல் தொடரலாம் என் !
கற்புக்கு ஓர் விளையும் வாங்கி தரலாம் !
என் வாழ்க்கைக்கு என்னை !
பெண் சுகம் என்றால் என்னவென்றே தெரியாமல் !
என்னை கெடுத்தவனுக்கு !
தன வாலிபத்தில் பெரும்பங்கை !
சிறையில் கழிப்பவனுக்கும் !
என்ன தரபோகிறது ? !
இந்த சமூகமும் நீதி மன்றமும் !
என் தாய் மாண்டு போனாள் !
நான் கேட்டு போன செய்தி கேட்டு !
என் தகப்பன் மாயமானான் !
நான் கர்ப்பம் தாங்கி நின்றதை கண்டு !
என்னோடு பிறந்தவளோ !
தானே தனித்து போய் அநாதை ஆனாள் !
இன்று இந்தவழக்கு முடியும் வரை !
இரக்கத்தோடு உச் கொட்டும் சமூகம் !
நாளை என்னை எப்படி பார்க்கும்? !
பதினாலு வயதிலேயே !
பத்தினி தனம் விட்டவள் தானே என்று !
தொட்டு பார்க்கும் துணிந்து !
படுக்கை போட்டு முந்தி விரிக்க சொல்லும் !
இத்தனையும் இழைத்த !
இன்றைய இயக்குனர் எழுத்தாளர்களை !
இந்திய தண்டனை சட்டம் தண்டிக்குமா ? இல்லை !
இந்த அவலங்கள் தொடராதிருக்க !
காதலை கடை சரக்காக்கும் !
கயமைக்கு தடை விதிக்குமா ? !
வழக்கறிஞர்கள் கேட்டனர் அவள் !
வாழ்க்கையை !
வழக்கின் வட்டத்திற்குள் அடைத்தனர் !
வழக்கின் விளிம்பில் நின்று !
வாழ்க்கை முடிவுக்கு கொண்டு வந்தனர் !
என்னை கெடுத்தவனுக்கு எட்டாண்டு சிறை !
எனக்கோ வாழ் நாள் முழுவதும் வதை !
வாழ்க இன்றைய திரைப்படங்கள் நாடகங்கள்

அகதியானவர்கள்

சுபேஸ்
சுதந்திரமடையா இந்தியாவின்!
தண்டகாரன்யக்காடுகளிலும்!
பாலஸ்த்தீனத்தின் !
இடிந்தகட்டிடங்களிலும்!
குர்தீஸின் குக்கிராமங்களிலும்!
ஈராக்கின் வீதிகளிலும்!
விடுதலைக்காக வீழ்ந்தவர்களின்!
ஆன்மாக்கள்!
வீடுகளை விட்டு!
புழுதித்தெருக்களை விட்டு!
சுதந்திரமாக ஊளையிடும்!
தெருநாய்களை விட்டு!
ஞாபகங்களை மட்டும்!
எடுத்துச்செல்லும்படி!
விரட்டப்பட்டவர்களின்!
முகாம்களில் தங்கியிருக்கின்றன!
ஈராக்கின் எண்ணெய் ஊற்றுக்கள்!
இல்லாதுபோகும்படியும்!
வன்னியின் வனங்கள்!
வாடிப்போகும்படியும்!
ஆப்கானின் மலைகள்!
பொடியாகும்படியும்!
காக்ஷ்மீரின் வீதிகள்!
பிளந்துபோகும்படியும்!
ஆகியிருக்கிறது!
அகதியாக்கப்பட்டவர்களின்!
துயர்ச்சுமையால்!
விரட்டப்பட்டவர்களின்!
வீட்டுமுற்றத்தில்!
விட்டுச்செல்லப்பட்ட!
சாய்வுநாற்காலியில்!
உட்க்காந்திருக்கிறது!
பள்ளியிலிருந்துவரும்!
குழந்தைகளைத்தேடும்!
தாத்தாவின் மனசு!
வாசத்தை தொலைத்து!
வாடிப்போயிருக்கும்!
வளவுப்பூக்கள்!
அகதியாக்கப்பட்ட!
வீட்டுக்காரனின்!
வாசத்தை தேடுகின்றன!
வெறுமை!
துப்பாக்கிகளின்!
துணையுடன்!
ஊரை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது!
யாரையும் நெருங்கவிடாமல்!
அணல்காற்றடித்து!
எழுந்த தீயில்!
எரிந்த வெளியில்!
எதிர்காலத்தை தேடும்படி!
சபிக்கப்பட்டிருக்கிறது!
ஒரு சந்ததி

இன்னமும் பசுமையாய் உள்ளத்தில்

நிர்வாணி
கருக்கலில் கந்தர் வண்டிகட்டி!
கொடிகாமச் சந்தை சென்று!
தேங்காய் வாங்கி வந்து!
கூவி விற்றதுவும்!
கருமைப் பசுவை காரிருளில்!
அத்தளு வயல்வெளியில் தேடியலைந்ததுவும்!
எல்லை அடி கூடியதால்!
வாய் சண்டை கிளுவங்கதியால் ஏறி!
ஆளுக்காள் முட்டி மோதியதுவும்!
ஐ£திகள் இல்லையென்று!
மேடை மேடையாய் பாரதி கவிதை சொல்லி!
கிறுக்கனென்று எம் மக்கள்!
முத்திரையிட்டதுவும்!
ஆண்டுகள் ஓடி!
வயதுகள் கூடி!
கூனிக் குறுகிப் போனாலும் கூட!
இன்னமும் பசுமையாய் உள்ளத்தில்