1. !
அர்த்தம் புரியாத்தோத்திரங்களை !
அமைதி தழுவவேண்டிய ஆலயச்சுவர்களில் !
கொடூரமாய் அறைந்து செப்பி !
திசையெட்டிலிருமிருந்து அசுவமேதகுதிரைகளாகி !
உயர்குடியின் உறவுகள் கூடிவந்து !
யாகம்வளர்த்த நெருப்பின் துளிபட்டு !
அமுதப்பால் அருந்தாத !
ஞானசம்பந்தரானேன் !
நானும் ஓர்பொழுதில் !
பின்னர் !
அநாதைச் சிறுவர்களுக்காய் !
வாசல்களில் நிதிசேகரித்தவர்க்கு !
அதட்டிக் குரைக்கும் நாயானேன் !
படிதாண்டி !
கடவுளை நெருங்கப்பிரியப்பட்ட !
ஊனமற்ற பெண்ணிற்கு !
தாதாவாயும் விசுவரூபமெடுத்தேன் !
மேலாடையின்றி !
அக்குளில் பெருகிய !
வியர்வையைப் போல.. !
நிர்வாகத்துள் பரவிய !
தாழ்த்தப்பட்ட சாதியினனை !
காசைக் கொண்டே துரத்தியபடி !
நிதானமாய் விளம்பினேன் !
கடவுளின் சந்நிதானத்தில் !
அனைவரும் சமமென்று !
இவனைப் போல் !
இன்னொருத்தனைக் கண்டிலேனென !
வார்த்தைகள் இனிக்க !
வழமைபோல் நெருக்கமாயின !
புலம்பெயர்ந்த பெரிசுகள்!
உண்மைமுகம் அறியும் ஆவலற்று !
பிறகென்ன !
கூத்தும் கும்மாளமடிப்பும். !
பிரியப்பட்டபோது !
பட்டமளிப்பும் முதுகுசொரிதலும் !
2. !
எங்கே போயிற்று !
என் ஓர்மம்? !
நெஞ்சு திமிறத்திமிற !
நியாயம் கேட்டும் !
எதிரிகளும் துரோகிகளும் !
பெருகப் பெருக !
கரையாமல் எஃகுவாகிய சுயம் !
சிதறியதெப்போது? !
ஏரிக்கரைகளில் புல்வெளிகளில் !
காற்றில்கேசம் எதையெதையோ கிறுக்க !
தூரப்பறந்த பறவைகள்பார்த்து !
நாளைகள் பேசிய தோழியர் !
காணாமற்போனது எந்தநாழிகையில் !
எல்லோரும் இரசித்துச்சுவைக்க !
இன்றென் வாழ்க்கை. !
கூடுவிட்டுப் கூடுபாயவிரும்பும் !
திருமூலரின் காத்திருத்தலைப்போல !
உண்மை முகத்தினைதேடி !
காலங்கள் மீறியவோர் !
சாபம் !
எனக்கு இனி. !
!
2001.08.03
இளங்கோ