விதையொன்று செடியாகி!
விரியும் நிலம் மீது!
பெண்மையின் சாயல்!
செடியொன்று மரமாகி!
குலுங்கி சிரிக்கையிலே!
கருத்த வானம்!
கரைந்து பொழிகிறது!
மொட்டொன்று பூபெய்துகையில்!
நாணிச்சிவக்கிறது!
வனாந்தர மேடுகள்!
பூக்கள் காயாகும் பருவத்தே ,!
கானகமெங்கும்!
கலவி வாசனை!
காய்கள் இலகுவாகி!
கனியும் தருணத்தில்!
மசக்கையின் நிறம்பூசும்!
மாகாடு!
விதையினை வெளித்தள்ளி!
வீறிடும் வேளையிலே!
வனமேகும் காற்றில்!
தாய்மையின் நெடி!
விழுந்த விதை!
மண்ணை ஊடுருவி!
வேர்பிடிக்கையில்!
பூமி துளிர்க்கிறது!
பூமி நிறைகிறது!
பூமி எழில்கிறது!
இளம்பச்சை நிறத்தில்
க.உதயகுமார்