மிக எளிதாக
கூறினாய்...
பிரிந்துவிடுவோம் என்று...
பிரிவு சொல்
உன் வாயிலிருந்து வருமுன்
நினைத்துப்பார்த்துண்டா
உன்னை...!
எத்தனை இரவுகள்
எனக்காக அழுதாய்
விழியில் வழிந்த
கண்ணீரைத் துடைத்த
கைகளில் பார்
என் ரேகைகள் பதிந்திருக்கும்...!
என் வரவுக்காக
வழியில் காத்திருந்த
உன் விழிகளில் பார்
என் உருவம் புதைந்திருக்கும்...!
நள்ளிரவுத் தாண்டும்
நம் பேச்சு விடியலின் அறிகுறியாய்
சேவலின் கூவால் கேட்கும்
நம் வாழ்க்கை
உயர்வின் வழி ஆராய்ந்த
நம் பேச்சு
ஒரு முத்தத்துடன் முடித்து
உறங்கியிருப்போம்
நீ... நானாக
நான்...நீயாக
மறுபிறவியில் பிறக்க
இப்பிறவியில் செய்யும் புனிதமானது
நாம் காதலிப்பது என்றாயே
எப்படி
உன்னால் மிக எளிதாக
கூறிட முடிந்தது
பிரிந்துவிடுவோமென்று
பிரிவு
உனக்கு சந்தோசம் எனில்
பிரிவு
எனக்கும் சம்மதமே

பிரபாகரன்