உனக்கென்ன!
மழையில் நனைந்தபடியே!
வீடடைந்துவிடுகின்றாய்!
மழைவிட்டும்!
தூரல் போடுவது!
என்னுள் தானே!
தொடுவானச்சாலையில்!
நடைபோகிறேன்!
என்று சொல்லியிருந்தால்!
நட்சத்திரங்களை!
அப்புரப்படுத்தியிருப்பேன்!
பார்!!
உன் ஒளியை திருடிக்கொண்டு!
எப்படி ஜொலிக்கிறதென்று.!
எதை விதைத்தாய்!
என்று தெரியவில்லை!
மனசெல்லாம்,!
வேர்பிடித்திருக்கின்றது.!
சகியே!!
உனக்கு தெரியாது!
நிலா!
தினம் வரிக்கட்டி!
வானத்திலிருந்து!
உன்னைப்பார்த்து!
ஒப்பனை இட்டுக்கொள்வது.!
நான்!
நுகர்ந்து பார்த்த!
வாசனைகளிலே!
வாசனைமிகுந்தது!
உன்!
மூச்சுக்காற்றுதான்!
உன் பெயரில் உள்ள!
எழுத்துக்களில் ஒன்றாவாது!
புத்தகத்தின் தலைப்பில்!
ஒட்டிக்கொண்டால் போதும்!
பக்கங்களை!
புரட்டிவிடுகின்றன!
விரல்கள்..!
உனக்கு!
காதல் கடிதம்!
எழுதியதில்!
கஜினியை!
தொற்கடித்தவன்!
நான்!
அதிகமான!
வரலாற்றுப்பக்கங்களை!
காதலிகளின்!
உதடுகளே எழுதிமுடித்திறுக்கின்றன.!
நான்மட்டும் என்ன!
விதிவிலக்கா.!
நான்!
மெட்டுக்கு பாட்டெழுதினாலும்!
பாட்டுக்கு மெட்டமைத்தாலும்!
என்னால்!
உன் பெயரை மட்டுமே!
இசைக்கமுடிகின்றது!
உள்ளங்கையில்!
பூப்பூத்த!
அதிசயம்!
நீ!
என் மடிசாய்த!
வேலையில்!
விக்கல் எடுக்கும்!
போதெல்லாம்!
உன்!
நினைவுகளை!
வாங்கிக்கொள்கிறது!
மனசு.!
நீ இப்படியெல்லாம்!
வாழலாம் என்று!
சொல்வதற்கில்லை!
என்றாலும்!
நான் இப்படியாகத்தான்!
வாழ்த்து கொண்டிருக்கிறேன்!
சம்மதமா?!
என்னை கவனிக்காமல்!
கடந்துச் சென்று!
தெருவோரப் பிள்ளையாருக்கு!
தோப்புக்கர்ணம் இடுவது!
நான் கவனிக்கத்தான் என்று!
எனக்குத் தெரியும்.!
நீ என்ன!
எதிர்திசைக்காட்டியா?!
நான் இருக்கும் பக்கமே!
உன்முகம் திரும்பமாட்டேன்!
என்கிறது!!
உன் பெயர்!
அறிந்து கொள்ளாதவரை!
நான் உனக்கு!
இட்டபெயர்!
உயிர்த்தின்னி!!
நான்!
உணர்ந்துக்கொண்டவரை!
நருமணப்பொருள்களே!
நருமணமற்று போனது!
உன்னிடம் மட்டும்தான்!!
!
-தொட்டராயசுவாமி.அ
தொட்டராயசுவாமி.அ, கோவை