கடலோங்கிக் கரைதழுவப் பார்த்து !
உடலுள்ளிருந்து தவித்தெழுந்தாத்மா !
மெய்யிறங்கியுன் விழி தேடி வருகிறது. !
பொய்யெது மெய்யெது !
போதிமாதவச் சிரிப்பெதுவென்றறியா !
மென்மயிர்ப் பூனைபோலேங்கி நடந்தவென்னிதயம் !
உன்மார்பிலணைகிறது. !
முலைதழுவி முன்னெற்றி மயிரொதுக்கி !
முத்தமிட்டுன் சிறுவுதட்டுச் சாரலையும் தாவென்று தவித்து !
ஆண்மையும் பெண்மையும் பெயரழியும் !
காலத்துள் போய்வரவாவென்று கேட்பேன். !
கேசம் கலைந்து கிடந்தவுன் கழுத்தில் புதைந்து புதைந்து !
நீலம் படர்ந்த நெடுவான முடிவுக்கும் போவேன். !
மெய்யும் காதலும் ஒன்றென்றுயிர் சுடர்கிறது. !
ஆடி - 1997 !
தேவஅபிரா puvanendran@home.nl !
************* !
வெளிவர இருக்கும் !
இருண்ட காலத்தில் தொடங்கிய என் !
கனவுகளும் எஞ்சி இருப்பவைகளும் தொகுப்பிலிருந்து . !
இத் தொகுப்பை இலங்கையில் இருக்கும் நிகரி வெளியீட்டகம் வெளியிடவுள்ளது. எனது கவிதைகள் ஏற்கனவே சரிநிகர், மூன்றாவது மனிதன், திண்ணை, விளக்கு, ழகரம், ஒளி, திசை போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன
தேவஅபிரா