நீர்த்திவலையால் !
மேகத்தை அழைத்து !
வானத்தை தன் !
மடியில் வீழ்த்தியிருந்தது !
அந்த அருவி !
வானம் கிறங்கிக் கிடந்தது !
அருவியின் அணைப்பில். !
மரங்களின் பச்சையம் !
வழிந்து !
கரை ஊறிக்கிடந்தது. !
நுரைதிரள் பொங்கு பேரிசை !
நடுவே !
குன்றின்மீது நாம் நின்றோம். !
நகரம் மறந்துபோயிற்று !
தெருக்களும் மறந்துபோயிற்று !
அருவிக் காற்றுள் !
இயற்கைப்பட்டு நாம் !
நின்றோம் - இயந்திர வாழ்வின் !
இரைச்சல் உட்புகாதபடி. !
வானவில்லும் நீரிறங்கிய !
அதிசயப் பொழுது! !
நிறம் கரைத்து !
அள்ளித் தெளித்தன !
நீர்த்துளி சிதறல்கள்- காற்றில் !
கரைந்தபடி. !
றைன் நதி நீள்வில் ஒரு !
புள்ளியாய் !
உயிரிசை எழுப்பியது !
அந்த அருவி. !
இரைச்சல் !
நீரிரைச்சல்- !
நரம்புகள் சிலிர்க்க மறுத்தால் நீ !
மரத்துப்போன பிறவி !
என்பதுபோல். !
என் !
கோடி நரம்புகளும் !
ஊரத் தொடங்கின. !
இயற்கையின் உலகில !
கணப்பொழுதேனும் !
வாழத்துடித்த என் இதயம் !
படபடப்பில் !
சிறகை அடித்து !
பறக்க மறுத்தது. !
குன்றின் உச்சியில் !
உயிர்த்து நின்றோம். !
நகரத் தயங்கினாள் என் !
நண்பி. !
சிட்டுக் குருவியின் விடுப்பாய் !
துருதுருத்தாள் என் !
மகள். !
விடைபெற இயலா !
தயக்கம் தோய்ந்து !
குன்றின் வழியால் !
வழிந்து வந்தோம். !
குன்று அடிவாரம்! !
இப்போதும் அந்த ஒற்றை மீன் !
துள்ளிப் பாய்வதும் !
வீழ்வதுமாய் !
போராடியது. !
நாம் !
படகில் ஏறினோம் - மீண்டும் !
இயந்திர வாழ்வின் !
ஒற்றைத் தீவுக்கு
ரவி (சுவிஸ்)