என்னிடம் இப்போதெல்லாம்!
வெற்றுத் தாள்கள் வந்து சேர்கின்றன.!
ஒவ்வொரு எழுத்துகளின் மீதான வாசிப்பின்!
முடிவிலோ அல்லது இடைநடுவிலோ அவை!
என்னிடம் வந்து விழுகின்றன.!
அவற்றில்!
தொகுப்புகளாகிக் கொண்டிருக்கின்றன!
என் எழுத்துகள்!
யாரும் வாசிப்பதற்காக அல்ல அவை என்ற!
ஆணிகள் என்னிடம் கிடையாது.!
ஆனாலும் அவை எனது அனுமதியுடன்!
அறையப்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன!
இன்று நீ மௌனமாக இருப்பது நாளை!
எப்படியும் உனை வளைத்துக் காட்ட உதவுமென!
என் முன்னாள் தோழன் சொன்னதை ஒருவேளை!
அவன் மறந்திருக்கவும்கூடும்.!
அவனை மறக்கவிடாமல் தாங்கிக்கொண்டிருக்கிறது!
அவனது இந்த எறிதல்.!
எழுதி என்னத்தைக் கிழிச்சாய் எனவும்!
கூடி என்னத்தைக் கண்டியள் எனவும்!
பேசி எதைச் சாதிச்சியள் எனவும்!
கேட்போர் கூடம் ஒன்றை நிர்மாணித்தால்!
சோம்பல்சோலையாய் விரியும் அது.!
அதனால் எழுது!
எழுதிக்கிழி அல்லது கிழித்து எழுது!
ஒரு பெண்ணாய்!
தலித்தாய்!
கருப்பனாய் கருப்பியாய்!
போராளியாய்!
இன்னமும் இன்னமுமாய்ப் பேச!
கடலுறிஞ்சிக் கிடக்கிறது உனது பேனா!
எழுது!!
-ரவி (07062008)

ரவி (சுவிஸ்)