பெண்ணியத்தை ஒரு தோசைபோல் !
சுட்டுக் காட்ட !
சவால்விட்டபடியே வந்தனர் அவர்கள். !
இரத்தமும் சதையுமாய் உடல் !
மாறுதலை நேசித்து !
வளர்கிறது !
நம்மைச் சுற்றியதெல்லாம் மாறுகிறது !
மாறாத தத்துவங்களை திணித்தவர்களும் !
காணாமல் போயினர். !
ஆனாலும் கல்தோன்றா காலத்து முன் தோன்றியவர்கள் !
நாம் !
கலாச்சார உளியுடன் அலைகின்றோம் !
பெண்சிலை வடிக்க. !
காதலின் வயப்படலில் எழும் !
உணர்வுகளை !
பெண்ணிடமிருந்து களவாடுகிறாய். !
போதைப் பொருளாய் !
மிதக்கிறாள் அவள் உன் நினைவில். !
பெண்விடுதலை என்றதுமே !
பெண்குறிமேல் மொய்க்கும் கருத்துகளோடு !
இரைச்சலிடும்வரை !
பெண்ணியம் என்ன !
பெண்ணையும் நீ !
புரிந்துகொள்ள முடியாது போ! !
- ரவி (சுவிஸ்,24122003)
ரவி (சுவிஸ்)