1. !
கனவுகள் !
நெஞ்சில் நெருப்பாய்ச் !
சுடுகின்ற வேளையில்.. !
மெலிந்த !
கோடைக் காலத்து ஓடையாய் !
நனவுகளின் நீண்ட நடைப் பயணம்... !
2. !
பழம் நினைவுகளாய் !
நீண்டு கிடக்கும் !
கோடைக் காலத்துச் சாலைகளில் !
வியர்த்துப் புழங்கிப் !
பன்னெடுந்தூரம் கடக்கையில் !
ஒரு விநாடி !
நிழல் ஒதுங்கக் !
கிடைத்த !
ஒரு நனவு மரம், !
எத்தனையோ கோடி கனவுகளில் !
ஒரு துளி நிறைந்ததென்று தேற்றும். !
!
3. !
சில விநாடிகளில், !
மீண்டும் கிளைதாவும் குரங்குபோல் மனம். !
கனவே, கனவே, !
காலத்துள் அடங்காத கனவே, !
நீ !
காலத்தில் சிக்கினாய் !
கழிவதெப்போது ?

காசிகணேசன் ரங்கநாதன்