குடை மழைக்கல்ல
நாம் ஒட்டிக்கொள்ள.
வானத்தின் கைகள்
கிச்சு கிச்சு மூட்ட.
குற்றாலம்
பாறையின் ஏக்கம்.
மழை ஊசிகள்
மயில் இறகுகளில்.
உன்இமை மயிர்களில்
வைரத்துளிகள்.
கைக்குட்டை போதும்.
இருவரும் குடியிருக்க.
வயதுக்கு வந்ததால்
நமக்கு பருவ மழை.
ப்ளஸ் டூவும் ப்ளஸ் டூவும்
நனைந்து ஒன்றானது.
விசும்பின் துளியில்
காதல் புல்.
நம் உடம்பே ஆடை
ஊசி நீர் தைத்தது.
தூரல் தொட்டதில்
இதயம் வரை இனிப்பு

ருத்ரா