மைபொதி......கருமுகில்கள் திரண்டு
மஞ்ஞை....மயில்
கல்..மலை
அவிழ்கதிர்.....இளங்காலை
பளிங்கின் நுண்சிறை வண்டினம்...கண்ணாடிச்சிறகுகள்
உடைய தட்டாம்பூச்சிகள்.
கோல் கொள் ஆயர்.......ஆநிரை(பசுக்கூட்டம்) மேய்ப்பர்கள்
கையில் கோல் ஏந்தி
குரவை......பண் ஒலி
பொறை......பாறை
சிலம்ப........ஒசைஎழுப்ப
கறி.........மிளகுக்கொடி வேங்கை............வேங்கைமரம்
படர்தந்து புரிய..படர்ந்து முறுக்கு ஏற்றி சுற்றிக்கிடக்கும்
உள் உள் தகைய..நினக்க நினைக்க அழகின் பெருமை மிக்க உணர்வுகள் தர
குண்டுநீர் நீலம்...ஆழம் நிறைந்த குளத்தின் நீலக்குவளைப்பூக்கள்.
குய்புகை நிழல.......நீரின் அடியில் நெளிந்து வரும் புகை போல் நிழல்
காட்ட
கள்ள மென் நகை கவிழ்ந்தே பூக்கும்.......தலைகவிழ்ந்து(அந்த
குவளைப்பூவைப்போல்) மெல்ல கள்ளச்சிரிப்பு உதிர்க்கும் காதலி
மாஇழை......மாட்சிமை மிக்க நகைகள் அணிந்து
முன்னே வளைமுரல் செய்யும்...கண்முன்னே கைவளைககளை குலுக்கி
ஒலிசெய்யும் காதலி
காந்தள் ஐவிரல் கண்ணில் அளைஇ..........காந்தள் பூ போன்ற ஐந்து
மெல்லிய விரல்களைக்கொண்டு வருடி
ஆறு அடைத்து கதழ் பரித்து ஆங்கே........அவள் காலடிகளின் ஒலி
வழியெல்லாம் விம்மிப் பரவ
ஆர்கலி ஒல்லென நெடுங்கண் நிறைக்கும்.........தாளம் தவறாத
ஓசையுடன் நீண்டு ஒலித்து அந்த வழியின் நெடிய இடத்தில்
எல்லாம்(அல்லது அவள் நீள்விழிப்பார்வைகள்)
நிறைக்கும்
ருத்ரா