(குறும்பாக்கள்)!
--------------------------------!
01.!
மெய்யெழுத்து உருகி!
உயிரெழுத்து எரியும்..ஒரு!
புதுக்கவிதை.!
02.!
கரையை காட்டிவிட்டு!
கரைந்து போய்விடும்..ஒரு!
கலங்கரைவிளக்கம்.!
03.!
காதலும் மெழுவர்த்தியும்...அதன் !
வெளிச்சத்தில் எழுதுவதற்குள்!
கரைந்து போய்விடும். !
04.!
ஊமை எரிமலை நீ !
உன் காலடியில்!
வெள்ளை லாவா!
05.!
ஒரு சுடரேந்திப்புலவர்!
இருட்டில் உருகிப்பாடும்!
ஒளி வெண்பா.!
06.!
திரி நரம்பு முனையில்!
மெழுகு வீணை உருகி..ஒரு!
ராகம் எரிகின்றது.!
07.!
நீண்ட தவத்தில்!
வெள்ளைச் சவம்!
கரண்ட் கட்டில் உயிர் வந்தது.!
08.!
இருட்டின் கனத்த சிலுவை!
வெளிச்சத்தின் வெள்ளை ரத்தம்..!
மேஜையில் ஒரு கல்வாரி.!
09.!
ஓவியம் எரிந்து!
ஓவியம் உருகும்.!
வெள்ளைத்தூரிகை இது.!
10.!
வெள்ளை இதயம் வழிந்து ஓடி !
இரவுகள் எரிந்து வெளிச்சக் காதலிக்கு!
உருகிய தாஜ்மகால் இது.!
!
-ருத்ரா!
(கல்லைடைக்குறிச்சி இ.பரமசிவன்)

ருத்ரா