வாழ்க்கைப் பிழை - ரமேஷ் சிவஞானம்

Photo by Raimond Klavins on Unsplash

என் ஜனனம்
தாயிடமிருந்து
மரணம்
நான் வாங்கிக்கொண்டது

ஐந்து நிமிடங்கள் -அந்த
அரை மணிநேரம்
அரை குறையாய் அங்கே
அழிந்துவிட்டேன்
அழித்துவிட்டேன் அழகிய
வாணாளை

அர்த்தமுள்ள வாழ்க்கையை
அநியாயமாக்கிவிட்டேன்

அவளைப் பார்த்த
அந்த அவசரத்தில்....
என் வாளுறை தவறியதால்
வந்த வினை
அவள் சொல்லியிருக்கலாம்
அத்துவைதம் தவிர்த்திருக்கலாம்
தப்பியிருப்பேன்

இது விதி என்று
பழிபோடமாட்டேன்
நானாக மாட்டிக்கொண்டேன்

நான்
வயது தவறிய
வாழ்க்கைப் பிழை

எச்.ஐ.வியின்
சிறைக்கைதி

நானும் ஒரு
எயிட்ஸின்
அடையாளம்

இப்போது
என் இரத்தின் இயக்கம்
எச்.ஐ.வி உயிர்க்கொல்லியிடம்
நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு கணமும்
ஒவ்வொன்றாக இறக்கிறேன்

என் உயிர்ப்புள்ள நீர்ப்பீடனம்
அழிக்கப்படுகிறது
ஆட்சிப்படுத்தமுடியாமல்
செத்துத் தொலைகிறது
இன்னும்
சில வருடங்கள்
சில மாதங்கள்
சில வாரங்கள்
சில நாட்கள்
மட்டுமே
என் வாழ்க்கை
இல்லை அழிந்துபோன
வாழ்க்கை....

மனித வாழ்வின் வரம்புகளை
எட்டிப்பார்க்க முடியாமல்
தவிக்கும்
எரிபந்தம் விழுந்த
வேளாண்மையாய்
என் வாழ்க்கை

சில பேர்களைப் பார்க்க
சிரிக்கத்தோன்றுகிறது
அந்த அணங்குகளிடம்
சிக்கக்கூடாதென்று அவர்களை
எச்சரிக்கிறேன்

ஒருவனுக்கு ஒருத்தி
ஒருத்திக்கு ஒருவன்
என்ற வாழ்க்கையைக்
கற்றுக்கொள்ளுங்கள்
இல்லையேல்
ஒவ்வொரு விடியலும்
தூக்குக்கைதியின் கடைசிப்
பகலைப்போல்
உங்களுக்கும்...

விட்டுவிடுங்கள்
தவறான உறவை

உங்களுக்கும் சேர்த்து
நான் மட்டும்
சாகிறேன்
இன்னும்
சில வருடங்கள்
சில மாதங்கள்
சில வாரங்கள்
சில நாட்கள்
மட்டுமே
என் வாழ்க்கை
ரமேஷ் சிவஞானம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.