உச்சிவான் தொட்டு
வெள்ளமாய் கொட்டும்
வெள்ளை அருவியின்
ஒற்றை துளிநீரின் பிறப்பிடம்.
மண்மூடிய விதைக்குள்
மரணம் அடையாமல்
உயிர் கொடிபூக்க
ஒளித்து வைத்த காற்று.
இவைகளும் கூட
என்னவளின் காதல்போல்
என்றும் ரகசியமாய்.
ஒருமுறை விடியலுக்கான
உயிர்வாழும் புற்றீசலாய்...
எட்டுநாளுக்கு வாழ்க்கைக்கு
பட்டில் கூடுகட்டும்
பட்டுபூச்சியாய்...
என்வாழ்வும் அவளின்
ஒற்றை காதலுக்காக
உயிர்தாங்கி நிற்கின்றது.
முகம்காட்ட மருத்த குயில்
மூங்கில் காட்டிற்க்குள்
சுரம்சொல்லி பாடும்.
முகம்காணா என்னவளின்
முழுதான காதல்
உயிராக என்னுள் வாழும்.
கைசாத்து இடாத
கருத்தொற்றுமை பத்திரம்
அவளின் காதல்.
இன்பத்தை இடைவிடாது
தருகிற அட்சயபாத்திரம்
அவளின் நேசம்.
அசுத்த காற்றை கூட
புல்லாங்குழல் செலுத்தி
இதமான ராகம்பாடும்
வித்துவானாய் என்காதல்
எந்தன் குறைதீர்க்கும்
என் காதலி.
அவளின் நினைவுகள்
பாலைவன கால்தடமாய் அல்ல
பல்லவனின் கல்வெட்டாய்
பசுமையாய்
வலிமையாய் என்றும்
என்னுள்.
கற்றை புயலை எதிர்க்கும்
ஒற்றை இலையாய்
துடிதுடித்து போகும்
எந்தன் இதயம்
அவள் எனை கோபிக்கும்
அந்த நொடியில்.
மெல்லிய மொட்டு
சட்டென மலரும் அந்த
ஒற்றை நொடியைப்போல.
ஆர்பறிக்கும் அலைகடல் நடுவில்
அமர்ந்து இருக்கும் அமைதியைபோல்.
அவளோடுபேசும் அந்தவினாடி
ஆண்டவனால் அருளப்பட்டது.
எனக்கு தெரியல
அவள் எனக்கு கிடைப்பாளா ?
இல்லையா என்று.
கடவுளின் முகம்பார்க்காமல்
காலம் எல்லாம் தொழும்
பக்தனைபோல,
என்னவளையும் என்காதலையும்
என்றும் தொழுவேன்
தமிழீழநாதன்