ஓட்டை வீடான..!
ஓட்டு வீடு,!
மாடி வீடாக..!
மாறிப்போனது!!
நகைக்கடை விளம்பர!
நகைகள்..!
வீட்டுப்பெண்களின்!
கைகளிலும், கழுத்திலும்..!
ஏறத்துவங்கின!!
கடன்காரர்களின் வருகை..!
குறைய ஆரம்பித்தது!!
கனவாகப்போய்விடுமோ? என்ற!
தங்கையின் திருமணம்!
நான் இல்லாவிடினும்!
லட்சம் இருந்ததால்..!
லட்சணமாய் முடிந்தது!!
அயல்நாட்டிலிருந்து!
காசோலை மூலமாய்!
வாழ்க்கை நடத்தியவன்..!
இப்பொழுது!
காசோடு வந்திருக்கின்றேன்!!
இழந்துபோன காலத்திற்கும்!
சேர்த்து வாழ..!
!
தந்தையின் நினைவைச்சுமந்து!
தனியாய் ஆடிக்கொண்டிருந்த..!
சாய்வு நாற்காலிச்சப்தம் வந்து!
காதுகளில் ..!
கிறீச்சிடுகிறது!!
தந்தையின் இறுதிநாட்களுக்கு கூட!
வரமுடியாமல்..!
விசாவினால் விலங்கிடப்பட்ட!
எனக்கு,!
யாரேனும் திருப்பித்தரக்கூடுமா?!
தந்தையின் இறுதிச்சடங்குக்கு!
முந்தைய நாளை?!
நிம்மதி இல்லாமல் போகின்ற!
இந்த பகலின்..!
முந்தைய இரவுக்காக!
காத்திருக்கின்றேன்!!
யாரேனும் திருப்பித்தாங்களேன்?!
- ரசிகவ் ஞானியார்
-- !
K.Gnaniyar!
Dubai
ரசிகவ் ஞானியார்