தூரமாய் இருக்கும்பொழுது!
நீ!
அலைபேசி வழியாக அனுப்புகின்ற!
பூக்களின் வாசனை,!
நெருக்கத்திலிருக்கும்பொழுது!
இடையில் ஊர்கின்ற!
பாம்புகளின் பயத்தில்!
வாடிப்போகின்றது!!
என்னை எரிச்சல்படுத்திய!
உனது ஆளுமையின் முட்களை!
எடுத்தெறிய!
நினைத்தபொழுது,!
கையில் இடறியது!
ஓர்!
ஓற்றை ரோஜா!!
நமக்குள்ளான!
காதல் கடிதங்களை மட்டும்!
நான் சேமித்திராவிட்டால்,!
உன் மீதான கோபத்தை!
எந்தக் காரணியாலும்!
தீர்க்க முடியாமல் போயிருக்கும்!!

ரசிகவ் ஞானியார்