மயிலிறகுக் கனவுகள் - ராமலக்ஷ்மி

Photo by engin akyurt on Unsplash

படிக்கப் போவதாய் சொல்லி!
புத்தகங்கள் கையில் ஏந்தி!
படிப்படிப்பாய் தாவி ஏறி!
மொட்டைமாடிக் குட்டிச் சுவரில்!
சாய்வாய் உள்ளடங்கி-!
புத்தகத்தை கைகள் விரிக்கையில்!
விழிகள் விரிந்ததென்னவோ!
விண்ணினை நோக்கி.!
கண் எட்டிய தூரமெல்லாம்!
அகண்ட பெருவெளியாய்!
அது ஒன்றே தெரிந்திட-!
உலகமே அதுதானோ என!
வானின் அழகில்!
மனமது லயித்திட..!
பொதிப் பொதியாய்!
நகர்ந்திட்ட வெண்பஞ்சு!
மேகக் கூட்டமதனில்!
பலப்பல வடிவங்களை!
உள்ளம் உருவகப்படுத்தி!
உவகை கொண்டிட-!
கூடவே குடை பிடித்து!
உற்சாகமாய் கனவுகள்!
ஊர்வலம் சென்றிட..!
கூட்டம் கூட்டமாய்!
பறந்திட்டக் கிளிகளோ!
கூட வாயேன் நீயுமெனக்!
கூப்பிடுவதாய் தோன்றிட-!
இல்லாத இறக்கை!
இரண்டால் எம்பிப்!
பறக்கவும் துவங்கிடுகையில்..!
தலைமாட்டுச் சுவற்றின்பின்!
தலைதட்டி நின்றிருந்த!
கொய்யாமரக் கிளையிலிருந்து!
கூடு திரும்பிய!
காகமொன்று கரைந்திட-!
மறைகின்ற சூரியனுடன்!
கரைகின்ற வெளிச்சம்!
கவனத்துக்கு வந்தது.!
மூடியது பதிமன்!
மடியிலிருந்த புத்தகத்தை-!
மயிலிறகெனக் கனவுகளைப்!
பத்திரமாய் உள்வைத்து-!
கரைந்திடுமோ அவையுமென்ற!
கவலையோ கலக்கமோ சிறிதுமின்றி-!
படிக்காத பாடங்கள் மட்டுமே!
பாரமாய் நெஞ்சில் இருக்க
ராமலக்ஷ்மி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.