நான் நாங்கள் தன்மையாம்!
நீ நீங்கள் முன்னிலையாம்!
அப்போ ‘நாம்’ என்னப்பா?!
தன்மை பன்மை வந்த பதிலில்!
திருப்தியற்ற குழந்தையின்!
தீராத குழப்பம் போலவே!
சுயநல விசையில் சுழலும் பூமியெங்கும்!
சுற்றியலைந்து!
தன்னைத் தானே தேடிக் கொண்டே!
இருக்கிறது நாளும்!
‘நாம்’.!

ராமலக்ஷ்மி