வாழ்க்கை சலிப்பூட்டுகிறது!
எத்தனை பகல்கள்!
எத்தனை இரவுகள்!
எத்தனை மனிதர்கள்!
ஏதோ இருப்பது போலும்!
ஒன்றுமே இல்லாதது போலும்!
தோன்றுகிறது!
தூரத்தில் கயிறுதானேயென்று!
அலட்சியமாக வந்தால்!
கிட்டத்தில் பாம்பாகிறது!
துரோகக் கழுகு!
என்னை வட்டமிடுகிறது!
எங்கு போயினும்!
மரண சர்ப்பம்!
என்னைத் துரத்துகிறது!
வாழ்க்கை வட்டம்!
நிறைவுறும் போது!
எனக்காக எதுவும்!
மிச்சமிருக்காது!
மாம்சம் சாம்பலாகும்!
நினைவுகள் சூன்யமாகும்!
இன்னார் இருந்தாரென்பதை!
இவ்வுலகம்!
சீக்கிரத்தில் மறந்து போகும். !

ப.மதியழகன்