நீ விடும் மூச்சு
கேட்காது யார்க்கும்...
ஒரு
பொத்தானைத்
தட்டினால்
உலகெங்கும் கேட்கும்
பேச்சு.
பிச்சையையும்
பிச்சையெடுத்து
பிரத்தியோகப்
படுத்தக் கூடும்.
சடலமும் சட்டென்று
பேசி முடிவுக்கு வரும்
எமனிடம்,
சொர்க்கம்? நரகம்?
என்று.
காலம் நகன்றால்
கருப்பையிலும்
கட்டாய உருப்பாகக்கூடும்
கைபேசியும் ஒரு நாள்