பா.அகிலன் கவிதைகள் 2 - பா.அகிலன்

Photo by FLY:D on Unsplash

1. யாரோ ஏதோ !
சில நட்சத்திரங்கள் !
துயர நிலவு !
யாரோ மட்டும் வருகிறேன். !
கையில் பற்றியிருந்த கொண்டல் மலர்களும் !
காற்றில் அலைவுற்று கூந்தலுமாய் !
குரூர வெளியில் !
உன்னையும் பறிகொடுத்தாயிற்று... !
”எங்கே போகிறாய” காற்றில் யாரோ ஒலிக்கவும் !
”தொ¤யாது...” !
!
2. முடிந்துபோன மாலைப்பொழுது !
பார்க்கிறோம், !
விழி கொள்ளாத் துயரம் !
உதடுகள் துடிக்கின்றன !
தடுமாறி உயிராகும் வார்த்தைகளும் !
காற்றள்ளப் போய்த் தொலைகிறது... !
நேற்று !
சணற்காட்டில் மஞ்சள் மௌனம், !
இன்று !
கண்களில் நீர் !
போகிறாய் !
மேற்கில் வீழ்ந்தணைகிறது சூரியன். !
-- பா.அகிலன்
பா.அகிலன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.