மக்களுக்கு வேண்டியதை!
நான் தீர்மானிக்க வேண்டும்!
பகடைகளை உருட்டுகின்றேன்!
உன்னுடைய தகமையையும்!
நானே தீர்மானிப்பதாக உள்ளேன்!
துரும்புச் சீட்டால் வெட்டுகின்றேன்!
மக்கள் எதை எதிர்பார்க்கின்றார்கள்!
கிளித்தட்டு மறிக்கின்றேன்!
நான் எதைக் கொள்ள விரும்புவேனோ!
அதையே அவர்களும் விரும்புவார்கள்!
காயா பழமா!
அதற்காக அவர்கள் எத்தகைய!
அர்ப்பணிப்புக்களையும் தியாகத்தையும் புரிவார்கள்!
மற்றவர்கள் எல்லோரையும்!
எம் எதிரிகளாய் பிரகடனப்படுத்துவோம்!
நான் தத்துவவாதி!
எனவேதான் புரட்சியை வழி நடத்துகின்றேன்
நடராஜா முரளிதரன், கனடா