சகல மூலைகளிலும் இருந்து!
தனித்துவிடப்பட்ட போதும்!
தாக்குவதற்கான படையணிகள்!
இல்லாதபோதும்!
கண்ணுக்குப் புலப்படாத!
பிரதேசங்களிலிருந்து!
கொடூரமான அம்புகள்!
பாய்ச்சப்படுகின்றன!
பெரும்பாலானவை!
அது பற்றியதாகவே!
இருக்கின்றது!
வறுமை எவ்வளவு!
கொடியதாக இருக்கின்றது!
நேரகாலத்துக்கு!
அது கணக்குகளை!
முடித்துவிட!
அனுமதிப்பதில்லை!
அதனால்!
முகம் குப்புறக்!
கவிழ்க்கப்படுகின்றது!
அதனைக் கண்டு!
பலர் சிரித்தும்!
சிலர் அனுதாபப்பட்டும்!
எல்லாவற்றையும்!
வென்று விடுவதற்கான!
வைராக்கியத்தை இழந்து!
நடந்து கொண்டிருக்கின்றேன்!
மாலைச் சூரியன்!
தெறித்து விழுந்து!
நிழலாகிப் போகின்றது!
என் நிழல் என்னை!
விழுங்கி விட்டிருந்தது!
பனிக்கும்பியின் உச்சிகள்!
தகர்ந்து கொண்டிருந்தன!
தோலைக் கிழித்து!
நாளங்களின்!
இரத்த ஓட்டத்தில் கலந்து!
உடலின் மூலைமுடுக்குகளில்!
குத்திக்கொண்டு நின்றன!
அம்பின் கூரிய முனைகள்
நடராஜா முரளிதரன், கனடா