விலையேற்றமும் தடுமாற்றமும் - நிந்தவூர் ஷிப்லி

Photo by Paweł Czerwiński on Unsplash

குரல்வளை நெரிக்கும் விலையேற்றம்-எம்!
குடும்பத்து வாழ்வில் தடுமாற்றம்-இனி!
மனிதர்கள் முகங்களில் பெரும் வாட்டம்-இது!
தினம் தினம் நிகழ்ந்திடும் போராட்டம்!
கொஞ்சூண்டென்றால் சமாளிப்போம்-இது!
கிடு கிடுவென்றால் என் செய்வோம்-நாம்!
நமக்கள் மட்டும் விவாதிப்போம்-இதை!
நாடெங்கும் உரைத்திட யோசிப்போம்!
சொகுசாய் வாழும் சீமானே-இன்று!
சிக்கலில் சிக்கிச்சீரழிய-அட!
ஏழைகள் நாங்கள் என் செய்வொம்-இனி!
ஒரு வேளைதான் சோறுண்போம்!
சிரித்தால் கூட செலவாகும்-என்று!
சிரிப்பை மறந்தே வாழ்கின்றோம்-பிறர்!
வாழ்க்கை பற்றிக்கவலையில்லை-இது!
விதியா?சதியா?தெரியவில்லை!
ஐந்துக்கும் பத்துக்கும் அலைந்தோமே-இனி!
ஐம்பது நூறைத்தேடணுமே-இன்னும்!
இரண்டு மாதங்கள் போனாலே-நாம்!
ஆயிரம் என்றே ஓடணுமே...!
ஏன்தான் மண்ணில் பிறந்தோமோ..?-இந்த!
கேள்விக்கு மட்டும் விடையில்லை-நம்!
வாழ்க்கைச்செலவின் வளர்ச்சி மட்டும்-என்றும்!
வளர்ந்தே செல்லத்தடையில்லை!
தண்ணீர் குடிக்கவும் காசாச்சு-இனி!
கண்ணீர் குடிக்கும் நாளாச்சு-இது!
எதுவரை என்பது தெரியவில்லை-அது!
தெரிந்தவர் யாரும் இங்கில்லை
நிந்தவூர் ஷிப்லி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.