எல்லோராலும்!
எல்லாவற்றாலும்!
கைவிடப்பட்டவளை!
நேற்று மாலை!
சந்தித்த போதுதான்!
வாழ்க்கையின்!
சில இருண்ட பக்கங்களை கண்டு கொண்டேன்..!
கவிதைகள் பற்றிய அவளது!
கேள்விகளின் வழியே தொடங்கிய!
எங்கள் சம்பாஷணை அவள்!
கனவுகள் பற்றிய வேள்விகள்!
வரை தொடர்ந்தன..!
முல்லைத்தீவில் பிறந்தவள்..!
ஒரு பின்னிரவில் செல் விழுந்த சம்பவத்தில்!
உறவுகளை இழந்தவள்..!
தன்னை விட பலமடங்கு வயதொத்த ஒருவனால் (அ) பலரால்!
மிக நீண்ட நேரம் கற்.............ழிக்கப்பட்டவள்..!
வாழ்க்கையின் அர்தத்தை பத்தாவது வயதில் தொலைத்தவள்..!
போராட்டங்களால் தன்னை தானே சிதைத்தவள்..!
கவிதைகள் பற்றி பேசிக்கொண்டிருந்த என்னை!
பைத்தியக்காரன் என்று கூட நினைத்திருப்பாள்..!
வாழ்க்கையின் கனதியான கணங்களை கடந்து வந்தவளுக்கு!
கவிதைகளின் அவசியம் அநாவசியமாகவே தோன்றியிருக்கும்..!
உன் வாழ்க்கை பற்றி ஒரு கவிதை எழுத வேண்டும் என்றேன்..!
சிரித்தாள் சிரித்தாள் சிரித்தாள்.. சத்தமாக சிரித்தாள்..!
உன் கவிதைகளால் எனது இழப்புக்களை மீட்டு தர ஒண்ணுமா?!
என்ற அவளது கேள்வி என்னை சிலுவையில் அறைந்தது..!
பெற்றோரை!
உறவினரை!
சகோதரரை!
கற்பை!
காதலை!
ஊரை!
நிம்மதியை!
வாழ்வை!
இன்னும்!
எல்லாவற்றையும்!
இழந்த ஒருத்தியைநீங்கள் எப்போதேனும் சந்தித்தால்!
மட்டுமே அதனதன் வலிகளையும் ரணங்களையும்!
உணர்வீர்கள்..!
அவளது இழப்புக்களை வார்த்தையாக்க முடியாமல்!
முதன் முறை கவிதையிடம் தோற்றுப்போகிறேன் நான்..!
இதற்கு மேல் எழுத கண்ணீரைத்தவிர!
என்னிடம் வேறு மொழிகள் இல்லை

நிந்தவூர் ஷிப்லி