பேரூந்தில் பயணம்.!
இவர்கள் !
ஒரு இருக்கை !
சீட்டு வாங்கி !
இரு இருக்கையில் !
அமரும் !
பரந்த மனிதர்கள்.!
இருக்கைக்குரியவன் !
சீட்டோடு வந்தால்,!
அவன் இருக்கையில் !
அவனுக்கே பாதி தரும் !
நவீன வள்ளல்கள். !
இவர்கள் !
நாடுகளின்!
ஆக்கிரமிப்பைக் கண்டு !
கொதித்தெழும்!
மனிதனேயர்கள்.!
இருக்கை!
ஆக்கிரமிப்புகளை!
முறியடிப்பதிலும்,!
இருக்கைகளை!
கைப்பற்றுவதிலும் !
மகா மகா!
அலெக்சாண்டர்கள்.!
மூவர் இருக்கை...!
நடு இருக்கை எனது.!
ஒன்றரை ஒன்றரை !
இருக்கையில் அமர்ந்திருந்த !
அந்த !
இரண்டு மாமனிதர்கள்!
என் உரிமை இருக்கையில் !
கால் பகுதி!
கால் பகுதியென,!
அரை பகுதியை !
விட்டுத்தந்தனர் !
மிகப்பெரிய மனதோடு. !
இருக்கி நெருக்கி !
உட்கார்ந்தேன்,!
உருக்கி ஒட்டவைக்கப்பட்ட !
இரும்பு சட்டங்கள் நடுவில்!
சொருகிய!
பஞ்சாக நான். !
ஆம்!
உறுதியான!
வேண்கலச் சிலைகளாய்!
அவர்கள்.!
நடுவில்!
ஒடுங்கிய!
ஈரக் களிமண் சிலையாய்!
நான்.!
இப்படி அப்படி !
நகரமுடியாதபடி !
தங்களை தாங்களே !
சிலுவையில் !
அறைந்துக் கொண்டு !
சிலுவையிலேயே !
வாழும் !
நவீன இயேசு நாதர்களாய்!
அவர்கள்.!
அடிமைகள்..!
சுதந்திரத் தென்றலை!
நுகராது வாழும்.!
தனக்குத் தானே!
அடிமைகளாய் வாழும்.!
சுய அடிமைகள்.!
!
-ந.அன்புமொழி!
சென்னை
ந.அன்புமொழி