நாளை என்!
மனைவியாகப் போகிறவளிடம்!
முதன்முதலாய்!
பேசப்போகும் பதட்டத்தோடு!
நுழைந்தேன்!
ஒரு எஸ். ட்டி. டி. கூண்டுக்குள்.!
உடன் வந்திருந்த நண்பன்!
கடை வாசலிலேயே!
காத்திருந்தான் ஆர்வத்தோடு.!
சற்று தளர்ந்து திரும்பிய என்னிடம் கேட்க!
அவனுக்கு சில கேள்விகள் இருந்தன.!
இவளக் கல்யாணம் பண்ணிக்கிட்டு!
எப்படி சமாளிக்கப்போறேனோ தெரியல!
சரியான பட்டிக்காடு.!
நீ வா போ ன்னு பேசறா மச்சி என்றேன்.!
அப்போதுதான் எங்களைக் கடந்துபோக நேர்ந்த ஒரு பட்டினத்துப் பெண்!
அழகாய் ரசித்து வெட்கி சிரித்துச் சென்றாள்.!
பாலு மகேந்திராவின் படம்!
தெரிந்த ஒரு டீக்கடை மாஸ்டர்!
துணைக்கிருந்ததால்!
பாலு மகேந்திராவின் படத்திற்கு!
பின்னிரவுக் காட்சிக்கு அனுப்பிவைத்தார்கள்.!
விடிந்ததும் தன் இளம் மனைவியிடம்!
சொல்லிக்கொண்டிருந்தார்!
பையன் ஒரு மாதிரி சூப்பரான ஆளு!
இன்றும் நினைக்கும்போது வெட்கமாயிருக்கிறது!
அன்றைக்கு நிறையப் பேசிவிட்டேன் போல
முத்துவேல்.ச