நாலா பக்கமும்!
சட்டங்களால் சூழப்பட்ட!
ஒரு சிலேட்டுத்தீவில்!
எழுதி அழித்து......!
அழித்து எழுதி......!
பழகி வந்தது!
பலப்பமொன்று!
புழுவென்று கருதியதொரு பறவை!
பற்றிக்கொள்ள!
அது!
அலைகடலை, மலைமுகடுகளை!
வனாந்திரத்தை, வனத்தை!
நதியின் தென்றலை, நெருப்பின் அனலை!
சொற்களின் சமவெளியை!
கடந்து பறந்தது!
பின்னொரு பொழுதில்...!
தளைகளற்ற பெருவெளியில்!
தவறவிடப்பட்ட போது!
அது!
சிறகு முளைத்தொரு!
வண்ணத்துப் பூச்சியாகியிருந்தது.!
- இப்னு ஹம்துன். !
----------------------------!
H.FAKHRUDEEN!
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)!
+966 050 7891953
இப்னு ஹம்துன்