மு. பழனியப்பன் !
!
இடம் விட்டு நகர்வதாய் முடிவாகிவிட்டது !
எல்லாம் உறுதி !
எவர் வந்தும் எங்களைத் தடுத்துவிட முடியாது !
மகிழ்வோடு நாங்கள் கிளம்புகிறோம் !
வரும்போது பெரிதாய் எண்ணி !
வந்தோம் !
போகும்போது பெரிதாய் எண்ணி வந்திருக்கத் தேவையில்லை !
என்று தோன்றுகிறது !
வாழ்க்கையின் ஒரு காட்சி இது !
இது நிறைவுக் காட்சியுமல்ல தொடக்கக் காட்சியுமல்ல !
இடைவேளைக் காட்சி !
அவ்வளவுதான் !
வந்தோம் !
ஆனால் செய்ததெல்லாம் நன்மை !
அது மட்டும் உறுதி !
இதனால் !
இருப்பவர்களைக் குறை கூற முடியாது !
அவர்களின் இருப்பின்படி !
இருக்க வேண்டிய கட்டாயம் !
சரி !
நாங்கள் கிளம்பிவிட்டோம்
மு. பழனியப்பன்