என்னை போலவே திணருகிறதே..! சிகரெட்டை போலவே.. பேர்ல மட்டும் மிச்சம் வச்சோம் நம்ம ஒரவ..!!
!
01.!
என்னை போலவே திணருகிறதே..!!
--------------------------------------!
உன்னிடம்!
கொடுத்துவிட்ட!
நிழலை!
இனி எப்படி பூமியில்!
பிரதிபலிக்க செய்வது!
என என்னை போலவே திணருகிறதே!
என் மேல் வீசும்!
ஒளிகள் எல்லாம்..... !
02.!
சிகரெட்டை போலவே..!
---------------------------!
என்னை பார்த்ததும்!
நீ மறைக்கும்!
சிகரெட்டை போலவே!
நானும் மறைக்கிறேன்..!
உன்னை பார்க்கும் போதெல்லாம்!
உன் மீதான ஆசையை.!
!
03.!
பேர்ல மட்டும் மிச்சம் வச்சோம் நம்ம ஒரவ..!!
------------------------------------------------------!
முண்டி அடிச்சு எனக்கும்!
சேர்த்து சாப்பாட்டுக்கு!
நிப்பியே பள்ளிக்கொடத்துல.....!
ஜன்னலோரம் சீட்டு பிடிச்சு!
எனக்கா விட்டு கொடுப்பியே!
பஸ்சு ஏறயிலே..!
என் மேல உரசிக்கிட்டு!
ஊர் கத பேசுவியே!
எறங்குற வரையில..!
பருவம் திறந்து விட!
பாவாடை மறச்சி என்னை!
கொண்டாந்து சேத்தியே வீடு வரையில..!
கல்யாணம் கட்டாம கடைசி வரைக்கும் இருப்போம்ன்னு கதை!
அளந்துகிட்டோமே படிக்கையில..!
சொல்லி தான் வாய் மூடல!
வருசம் கூட ஒன்னு ஏறல..!
கல்யாண சந்தையில கட்டி விட்டாக!
நாங்க காணாத தூரமா பிரிச்சி வச்சாக..!
பிரிகையில ஒரு தடவ பாத்துகிட்டோம்..!
ஒன் பிள்ளைக்கு என் பேரும்!
என் புள்ளைக்கு ஓன் பேரும்!
வைக்கனும்னு சொல்லி வச்சுக்கிட்டோம்.. .!
நெனச்சபடியே பேரு வச்சோம்..!
அந்த பேர்ல மட்டும் thaana!
நம்ம உறவ மிச்சம் வச்சோம்
சத்யா