மு. பழனியப்பன்!
வேலைப்பளு!
அதிகம் என்பதில்!
பெருமை இல்லை!
சோர்வே!
தட்டுகிறது!
வேலைகள்!
பல வழிகளில்!
வரலாம்!
பேருந்து நிறுத்தத்தில் இருந்து!
மனைவி தன்னைக் கூட்டிப்போகச் சொல்லி!
அழைக்கலாம்!
சந்தேகம் கேட்க!
நண்பர் தொலைபேசியில்!
அழைக்கலாம்!
அலுவலகப்!
பணிகள் இல்லம்!
தேடி வரலாம்!
மற்றவர்க்காக!
நாம் செய்வதாக!
ஒத்துக் கொண்டபணிகள்!
பயந்து ஓடச் செய்யலாம்!
பிறர்க்காக நாம் வேலைகளைச்!
செய்து முடிக்கையில்!
நமக்கான வேலையை!
யார் முடிப்பது!
எனக்கான கவிதையை!
நான் எப்போது எழுதுவது!
எனக்கான புகைபப்டத்தை!
நான் எப்போது!
எடுத்துக்கொள்வது!
எனக்கான வேலை!
எதுவும் இல்லையோ!
palaniappan

மு. பழனியப்பன்