மனிதர்கள் சந்திக்க!
மறுக்கிறார்கள்!
வீட்டில்!
எல்லோரும் சந்திப்பது!
அபூர்வமாகி விட்டது,!
அவரவர்க்கு பணி நேரம்!
பகலிலும் இரவிலும் மாறி மாறி வருகிறது!
அப்பாவிடம் நேரடியாக!
பேச வெட்கப்பட்ட!
மகனால்!
தொலைபேசியில் அரைமணி நேரம்!
கருத்து சொல்லமுடிகிறது,!
மனைவி ஓர் ஊரில்!
கணவன் மற்றொரு ஊரில்!
குழந்தை உண்டு அவளுடன்!
இனி வேண்டுமா சந்திப்பு!
!
கடன் பெற்றவரை!
அவரின் வீடு தேடிவந்தும்!
சந்திக்க முடிவதில்லை,!
!
அலுவலகத்தில்!
உள் இணைப்புகள் வழியாகவே!
காரியங்களை நிகழ்த்திக் கொள்ள முடிகிறது,!
பொது இ,டங்களில்!
சந்திப்புகள்!
நாகரீகமற்ற முறையிலேயே!
அரங்கேறுகின்றன,!
!
சந்திப்புகள் நிகழ்வதே இல்லை!
பெரும்பாலும்,!
எதற்காகச் சந்திப்புகளற்ற!
வாழ்க்கை!
முகத்திற்கு முகம்!
காண இயலாத வாழ்க்கை!
எதைச் சந்திக்க!
இவ்வளவு!
விரைவாய் முன்னேறுகிறது!
!
-மு.பழனியப்பன்
மு. பழனியப்பன்