ஏழை மக்களது ஆப்பிள் மரம் - மு மேத்தா

Photo by Jason Leung on Unsplash

 வளமான சூழ்நிலையில் வளர்வேன் - ஆனால்
வறியவரின் கைகளிலே தவழ்வேன்
மலிவான விலையின் நான் கடைகளிலே
கிடைப்பேன் - ஏழை
மக்களது ஆப்பிள் மரம் என்ற பெயர்
எடுப்பேன்!
மரங்களில் நான் ஏழை - எனக்கு
வைத்த பெயர் வாழை!

கருத்தாக்கிப் பிள்ளையினைப் பெற்றெடுத்துக்
கண்மூடும் புத்திரிநான் எனக்குக் கீழே
குருத்துவிடும் கன்றுக்கு வழியை விட்டுக்
குறிப்பறிந்து ஒதுங்குவதால்

தலைமுறையின் தத்துவத்தை புவிக்குக் காட்டும்
தடயம் நான்

வானத்தை தொடுவதற்குக் கனவு காணும்
வழக்கமில்லை என்னிடத்தில் மயக்கமில்லை
மானிடரின் புழுதிக்கால் பதியும் இந்த
மண்ணுடன் என் உறவதிகம்! ஆதலாலே

மரங்களில் நான் குட்டை மரம்
மனிதர்களின் கைகளுக்கு இலகுவாக எட்டும் மரம் மானிடர் செய்யும் சிவப்பு விளம்பரம்
மதிலின் முதுகில் மாட்டியிருக்கும் - நானோ
தானாய் எழுந்து தட்டி கட்டிய
தரையின் பச்சை விளம்பரப் பலகை!

அழைப்பிதழ்கள் திருமணத்தின்
அறிமுகங்கள் நாங்கள்
அடையாள மரங்கள்

கல்யாண வீடுகளில் காவலுக்கு நிற்கும்
துவார பாலகர்கள்!

குட்டை மரமெனும் குறையை என்
பெரிய இலைகளால் பெயர்த்து தகர்த்தவன் நான்!
என் இலைகள்.....
மயிலிடம் கடன் வாங்காத
பச்சை நரம்புகளால் ஆன
தோகைகள்!

கலைகளில் இன்றியமையாத
சமையற் கலை - என்
இலை வாகனத்தில்
ஏறி வரும்போது

விரல் வரவேற்பு
விரைவாகக் கிடைக்கும்!

என் இலைகள் உபசரிப்பின் இலக்கியங்கள்
விருத்தினரின் அந்தஸ்தை
எடை போடும் இயந்திரங்கள்!

சோற்று புமியின்
சொர்க்க வாசல்கள்
ஏழை வயிறுகளின்
இலட்சியக் கனாக்கள்!

இந்த மனிதர்கள்
உண்பதற்கு முன்னர்
உணவு இலை என்பார்கள்
உண்டு முடித்த பின்னர்
எச்சில் இலை என்று எறிந்து விடுவார்கள்

கூடத்தில் மரியாரைப் புச்சு
குப்பைத் தொட்டில்களில் எங்கள்
ஆயாச மூச்சு  தொட்டி இலையையும்
துடைத்துச் சாப்பிட
இந்த தேசத்தின்
தெரு ராஐhக்கள்
ஒருவரோடொருவர்
கட்டிப் புரள்கிறபோது

எதிர் கால இருட்டை எண்ணிப் பதைக்கிற என்
இதய வேதனைகளுக்கு
உவமைகள் ஏது?   - மு மேத்தா("வாழை மரத்தின் சபதம்")
மு மேத்தா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.