நீ வருவாய் என . . .!
நீ சென்ற வழியெல்லாம் தேடிப்பார்க்கிறேன்!
நீ வந்த வழியெல்லாம் வந்துபோகிறேன்!
நீ வாழ்ந்த வாசலில் விழியை விதைக்கிறேன்!
நீ வாசம் வீசிய இடங்களிலிருந்து சுவாசம்பெறுகிறேன்!
நீ புன்னகை வீசிய இடங்களில் எல்லாம் பூத்துக்குலுங்குகிறேன் !
நீ பிரிக்கப்பட்ட இடத்திலிருந்து பிரியமுடியாமல் தவிக்கிறேன்!
நீ கொடுத்த நம்பிக்கையால் மட்டுமே உயிர் வாழ்கிறேன்!
என்றாவது ஒரு நாள் நீ வருவாய் . . .!
நீ இருந்த இடங்களில் நான் இறந்தும் இருக்கின்றேன் !
நீ இல்லாத இடங்களில் நான் இருந்தும் இறந்திருக்கிறேன்!
என்ற என் இருப்பை உறுதி செய்ய!
என்றாவது ஒரு நாள் நீ வருவாய்
மார்கண்டேயன்