தெருவெங்கும் காலடித் தடங்கள்!
கதவை தட்டிவிட்டுப் போயிருக்கிறது!
மழை!
சொட்ட சொட்ட நனைந்திருக்கிறது!
காயப் போட்டிருந்த துணி!
நள்ளிரவில்!
விழித்திருக்கலாம் நான்!
ஓடுகள் கழுவும் மழையை!
ஒளிந்திருந்து பார்த்திருக்குமோ!
நிலா?!
குழந்தையை முத்தமிடும்!
தேவதை போல்!
சுவர்களில்!
முத்தமிட்டுப் போயிருக்கிறது மழை
லதாமகன்