தானியங்கி குழாய்களும் நானும்.. அமைதியை விளைவித்தல்!
01.!
தானியங்கி குழாய்களும் நானும்!
-----------------------------------------!
கை நீட்டினால் !
தண்ணீர் கொட்டும்!
தானியங்கி நீர்க் குழாய்களும்!
தலையைத் தட்டினால்!
நீர் தந்து பின் தானே !
நிற்கும் குழாய்களும்!
ஏனோ பிடிப்பதில்லை!
எனக்கு !
முதன் முதல்!
தானியங்கி குழாயில்!
எப்படி கையலம்புவதென்று!
குழம்பி அவமானம்!
அடைந்ததாலோ!
குழாயை நிறுத்தாமல்!
வீட்டில் பழக்க தோசத்தில்!
இருந்து விடுவாதாலோ!
சோம்பலை வளர்ப்பதாலோ!
காரணம் எதுவாயினும்!
தண்ணீர் தேவையற்று!
வீணாகிறதே இந்த தானியங்கி!
குழாய்களில் என்பது!
மட்டும் காரணமில்லை.!
!
02.!
அமைதியை விளைவித்தல்!
--------------------------------!
என் நுழைவின் பின்!
தானே அடைத்துக் கொள்ளும்!
தானியங்கிக் கதவுகள் !
என்னை பயங்கொள்ளச்!
செய்கின்றன.!
திறந்து வெளியேறவோ!
சிறு ஆசுவாசம் செய்து!
கொள்ளவோ தேவைப்படும்!
அடையாள இலச்சினை!
எந்த நேரமும் தொலைத்துவிடும்!
பயத்தோடே இயங்குகிறேன்.!
பொருட்களை இடம்மாற்றி !
வைக்கிறேன்!
புறப்படும் முன் !
எடுக்க வேண்டியவற்றை!
பட்டியலிட்டு எழுதியும் வைக்கிறேன்!
நேர்த்தியாக திட்டமிடுகிறேன்!
பின்னும் தீர்வதில்லை சந்தேகங்கள்!
எல்லாம் முடிந்த பின்!
இங்கிருந்து செல்ல முடியுமா?!
செல்லும் முன் எல்லாம் !
சரியாக முடிந்துவிடுமா!
கதவுகளோ அடையாள இலச்சிகளோ!
அதன் நியாயங்களை செய்த!
வண்ணமே இருக்கின்றன!
என்றாலும் சந்தேகங்கள்!
என்னோடே பயணிக்கின்றன!
அனிச்சையாய் சுழலும் சுவாசம் போல.!
சரி..!
தானியங்கிக் கதவுகளோ!
இருப்பை பதிவிக்கும் !
அடையாள இலச்சினைகளோ !
இல்லாத ஓரிடத்தில்!
மட்டும் அமைதியின் நெற்பயிர்கள்!
தானே விளைந்திடுமா என்ன
உயிரோடை லாவண்யா