கவி ஆக்கம்: கண்டணுர் சசிக்குமார்!
!
ராப்பகலா காட்டோடு!
மல்லுக்கட்டி!
சீப்பட்டு சின்னப்பட்டு!
சேறாடி!
வெள்ளாமைகளை!
அறுத்து.!
அடித்து களந்து£க்தி!
பவுனு பவுனுன்னு!
பொதி பொதியாக் கொண்டாந்த!
விளைச்சல்களை!
செவுளில் கை நெறித்து!
முதல் வெள்ளாமையை!
பொங்கள் வைத்து!
மனுசனோடு மல்லுக்கட்டி!
உழைத்த ஆடு!
மாடுகளுக்கு சோறுட்டி!
மழை தந்த வான்நோக்கி!
சோறு வீசி!
நிலத்துக்கு மாலைகட்டி!
மரியாதை செய்வமே!
அதுதான்!
பொங்கலெனும்!
தமிழுர் திருநாள்!
அந்தி கருத்து மறைய!
பொங்கலோ பொங்கலென்று!
மக்யாம் நாத்து!
திங்களோ திங்களென்று!
குடும்பத்தோடு போடுற!
கூச்சலில் கிடைத்த!
இன்பமும் என்ன!
சொல்ல!
எப்போது கிட்டுமோ!
என் போன்ற!
தமிழனுக்கு?!
கவி ஆக்கம்: கண்டணுர் சசிக்குமார
கண்டணூர் சசிகுமார்