ஆட்டம் எதற்கு உனக்கு?!
நிலமகளே-நீ!
குலமகளா இல்லை விலைமகளா?!
குலுக்கலாட்டம் உனக்குமா?!
ஆட்டத்தின் ஆரம்பம்!
அரங்கத்திலா-நீரின்!
அந்தரங்கத்திலா?!
காணுமிடமெல்லாம்!
காற்றும் மழையும்!
சுழன்றடித்து!
புவியை புரட்டி எடுத்தது!
உன் ஆட்டத்திற்கு!
தொலைக்காட்சி விளம்பரமோ?!
மானுடம் கோள்களை!
வணங்கியதுண்டு!
மானுடத்தை கோள்கள!
மதித்ததுண்டா?!
அரிசி கொடுத்து!
பசியை போக்கியவள் நீ!
உன் பெரும்பசிக்கு!
மண்ணையே வாய்க்கரிசியாக்கி!
மனிதர்களை புதைத்து!
விழுங்கியது!
என்னநியதி?!
-கணபதி
கணபதி