தலை நரைத்த மலையின் உச்சியில்!
நடுங்கி வாழ்ந்த போதும்,!
அடர்ந்த காடுகளின் இருளில்!
வாழும் விலங்குகளுக் கிடையில்!
வசிக்க நேர்ந்த போதும்,!
பனி உருகி ஓடும் ஆற்றின்!
கரையில் கூழாங்கற்களின் மேல்!
அமர்ந்து குளித்த போதும்,!
நில நடுக்கத்தில் உருண்டு வந்த!
மலைப் பாறைகளை ஓடிக் கடந்ததும்,!
ஆற்றின் மேல் தொங்கும்!
பிரம்புப் பாலத்தைக் கடந்து!
கரை சேர்ந்ததும்!
பெரிதாக எனக்குத் தோன்றவில்லை,!
ஆனாலும் மனம்!
உறைந்து தான் போகிறது!
மனிதன் மறைத்து வைத்து!
எடுக்கும் வீச்சரிவாளால்

கணபதி