துருதுருத்து!
எலும்புக்கூடாய்!
கல்லறைக்குள்!
அமிழ்ந்துகிடந்தது!
அச்சடலம்!
அறுத்து எறியப்பட்ட!
தோரணங்களும்!
கொழுத்திய ஊதுபத்தியும்!
ஊத்திய பாலும்!
உடைக்கப்பட்ட!
பானைத்துண்டங்களாய்!
சிதைந்துகிடந்தன!
வாழும்போது!
ஓங்கியறையப்பட்ட கதவுகள்!
வாழ்வின் முடிவில்!
திறக்கப்படுகின்றன!
ஆனால் வாழ்க்கையோ!
வாழும்போது!
ஓடுக்கப்பட்ட சாளரத்துக்குள்!
தன்னை பூட்டிக்கொள்கிறது!
-கனக ரமேஸ்
கனக ரமேஸ்