வற்றாத கடல் சிற்றாறாய்!
ஆனதொரு காட்சி உண்டா?!
மூன்றில் இரண்டு நீருக்கென!
தாரை வார்த்த பின்னும்!
தரையை கையகப் படுத்தலாமோ!!
கண் பட்ட இடமெல்லாம்!
வெள்ளம் தொட்ட நீர் நிலை,!
ஊரும் பயிரும் நீருக்குள்.!
நட்ட பயிரும் மனித உயிரும்!
நட்டப்பட்டது.!
விளை நிலமெல்லம் வீடானதால்!
எழுந்து வந்த வெள்ளம்!
ஊருக்குள் ஒண்டிக்கொண்டது.!
விரட்டப்பட்ட மக்களோ!
கண்ணீருடன் தண்ணீரில்.!
குடித்துவிட்டு தெருவில் கிடக்கும்!
மனிதர்களைப்போல்!
நீயும் குடித்து கிடப்பது முறையோ!!
இந்திய நாடாளுமன்றம்!
முடக்கப் படுவதுபோல்!
கல்விக்கூடங்களை முடக்குகிறாயே!
நீ எதிரணியா? இல்லை நீதித் தவறியதா?!
இருக்கும் குடிசையை இடித்துவிட்டு!
கான்கிரீட் வீடு கட்டித்தருவதாய்!
தமிழக அரசு சொன்னதினால்!
நீ இருந்த குடிசைகளை இடித்தழித்தாயோ!!
இருண்ட மேகங்கள்!
பாரி வள்ளலாய் வாரிக்கொடுத்தாலும்!
துயரங்கள் தொடர்வதால்!
அன்றாடங்காய்ச்சிகளின் பட்டினியால்!
தூற்றல் தான் காணும்

கணபதி