அதே வானம், நிலவு,நட்சத்திரம்!
வாழ்வும் அவ்வாறே இயல்பாக!
மாற்றங்களின்றி மௌனமாகப் பயணிக்கும்!
உறவுகள் வரும் போகும் உரையாடும்!
கலகலக்கும்!
எட்டி நின்றே தூற்றிப் புறம் சொல்லி அகலும்!
மகிழ்வின் தருணங்களில் சிரித்ததுண்டு!
முரண்பாடுகளின் முடிவில் சினந்ததுண்டு!
உணர்வுகளின் ஆர்ப்பரிப்பில் சிலிர்த்ததுண்டு!
ஆனாலும்,!
ஒரு கையசைவு!
பார்த்தனுக்கு வாய்த்ததொரு சாரதியாக!
ராமனுக்கு அமைந்ததொரு குகனாக!
அதியமான் களித்ததொரு அவ்வையாக!
வள்ளுவன் சொன்ன நட்பாக!
எதுவோ நானறியேன்.!
இருந்தும்!
நல்லதொரு சினேகம்!
லயமாக அழகாக இனிதாக எனதாக...!
கனிகை
கனிகை