01.!
வாழ்த்துக்கள் !
------------------!
விலாசத்திற்காக விடுதலையையும்!
தற்பெருமைக்காக தாயகஉணர்வையும்!
தாராளமாய்ப் பேசும்!
ஏராளமான எம்மவர் மத்தியில்!
எத்தனையோ உத்தம உறவுகள்!
ஏகாந்தமாய் எவ்வளவோ செய்திருக்கும்!
அத்தனைக்கும் அன்புடனே!
வாய்நிறையச் சொல்லுகிறேன்!
வாழ்த்துக்கள் பலகோடி!
குன்றின் விளக்கொளியாய்!
குவலயம் தன்னில்!
என்றுமும் வாழ்வு ஏற்றமொடு!
எழில் பெற்றோங்க!
நன்றென நல்லன பெற்றே!
நானிலத்தே நீடூழி வாழ்க!
வாழ்க வாழ்கவென!
வாய்நிறையச் சொல்லுகிறேன்!
வாழ்த்துக்கள் பலகோடி!
02.!
பொங்கு தமிழே!
-------------------!
உணர்வின் ஊற்றாய்!
உரிமையின் உணர்வாய்!
பொங்கு தமிழே!
தமிழரின் திரட்சியாய்!
தாய்நில எழுச்சியாய்!
தரணியெங்கும் பொங்கு தமிழே!
புலம்பெயர் தமிழரின் புத்தெழுச்சியாய்!
வெளிநாடுகளில் வெளியரங்கப்பேரெழுச்சியாய்!
விடியலின் விளைநிலமாய்!
மூச்சை வீச்சாக்கி!
முழுமையாய் பொங்கு தமிழே!
ஈழத்தமிழன் இழப்பதற்கு!
இனி எதுவுமில்லையென்ற!
நிலைகண்டும் நீ!
பொங்காதிருப்பது இழிதன்றோ? !
தரணியில் மீண்டும் !
தமிழரின் தாய்நிலம்!
புத்தொழிவிட்டு பொங்கிடப் !
பொங்கு தமிழே பொங்கு தமிழே !
உணர்வின் ஊற்றாய்!
பொங்கு தமிழே பொங்கு தமிழே !
-கலாநிதி தனபாலன்
கலாநிதி தனபாலன்