01.!
யாமிருக்கப் பயமேன்!
-------------------------------!
யாமிருக்கப் பயமேன் என்று!
யான் யதார்த்தத்தில் கண்டதில்லை!
யாதேனும் பயனின்றி யாரேனும் வருவதில்லை!
யாரோ வருவார் யாரோ போவார்!
வருவதும் போவதும் தெரிகிறது!
வந்தவரெல்லாம் வாங்கிக்கொண்டுதான் போகின்றார்!
இவர்கள் வாரிக்கொடுத்தால்!
வாழ்த்துச் சொல்லும் வஞ்சகர் கூட்டம்!
கொட்டிக்கொடுத்தால் கூடிக்குலாவும்!
குள்ள நரிக்கூட்டம்!
தட்டித்தவறி தடையேதும் வந்து!
கொடுக்காது விட்டால் கொடியவனென்று!
கூக்குரலிட்டு கூட்டம் கூட்டி!
சேற்றினை வாரிச் சிரித்து நிற்கும்!
சிறந்த மனிதர்கள்!!
சிந்தித்து நின்றேன் சிதையா மனதுடன்!
அந்தியும் வந்தது அடுத்த காலம்!
காலத்தின் கட்டாயம்!
கடந்து செல்லும் இவர்களையும்!
கணக்கெடுத்து கடந்துசெல்ல முனைகிறேன்!
என் காலத்திற்குள்ளான காலநதியை...!
02.!
மூன்றெழுத்து!
-------------------!
வாழ்வு எனும் மூன்றெழுத்து!
வளமாக வாய்த்திடவே!
அன்பு எனும் மூன்றெழுத்து ஒளிகொண்டு!
இருள் என்ற மூன்றெழுத்து!
வாழ்வில் இடம் பிடித்து விடாமல் எாிகின்ற!
தீபம் எனும் மூன்றெழுத்து!
வெற்றி எனும் மூன்றெழுத்தை!
விடாமல் பிடித்துவிட என்னை விளைவித்த!
சக்தி எனும் மூன்றெழுத்து!
அது என் அன்னை
கலாநிதி தனபாலன்