விண்ணினைத் தொட்டிடும் விரக தீயினால் !
விழி எனும் விளக்கிலே விாித்த!
விருப்பு எனும் நெடும் திாியிலே!
தீபம் ஏற்றினாள் காதல் தீபமேற்றினாள்!
மாம்பழ மதுரமேனி மங்கையின் கண்ணிலே!
கண்ட காதலால் கன்னியுடன் சென்று!
காமம் கலந்துண்டு களிப்புற்று கழித்திட்ட!
கனிந்த பொழுதுகள் காலத்திற் புதியது!
மனம் புதியதென்று பூமகளைப் புாிகையிலே..!
நெருப்பென்ன நின்ற நெடும் குமாி!
நெருங்கி வந்ததுவும் நிசம் தானோவென்று!
நின்று நினைக்கையிலே கருத்தைப் பிழைப்பித்து!
கட்டியவள் அணைக்கையிலே காதல்தான் பெருகியது!
ஆசையினாலுண்டான அறியாத ஆயிரமாயிரம் உணா்வுகளில்!
அன்பேதான் ஆதிக்கம் செலுத்தியது ஆதலினால்!
அழகுத் திருமகள் ஆசையுடன் கூடிவந்து!
கொண்டு வந்த காதலெனும் தீபமது!
ஆண்டாண்டு காலமதாய் அணையாது எாியட்டும்
கலாநிதி தனபாலன்