?!
--------------------------------!
அழுகின்ற பிள்ளைக்கு!
கொடுக்க உணவில்லை..!
குளிரைத் தாங்கிட!
போதிய உடுப்பில்லை..!
விழுகின்ற குண்டுகளின்!
வேகத்தை பொறுத்தே,!
அடுத்த நிமிடங்கள்!
உயிர்வாழ்கிற நிலை..!
எங்கெல்லாம் குண்டுகள்!
விழுகின்றனவோ!
அங்கெல்லாம் அழுதபடி!
தமிழ்த் தாய்மார்கள்...!
இங்கெல்லாம் நடக்கிற!
இன்னல்கள் கண்டும்!
இனிக்குமா நமக்கு!
புத்தாண்டும் பொங்கலும்?!
காந்தியம் பேசிவிட்டு!
களவாணித் தனமாக!
இந்தியன் அளித்த!
ஆயுதங்கள் கொண்டு,!
சிங்கள வெறியன்!
தொடுக்கிறப் போரில்!
இந்தியர் என்பதால்!
நமக்கும் பங்குண்டு..!!
கொல்லாதே என்று!
கூக்குரல் எழுப்பினால்!
தேசத் துரோகமாம்!
இந்தியம் சொல்கிறது...!
கொலைகார இந்தியனாய்!
வாழ்ந்து தொலைப்பதைவிட!
தமிழனாய் தேசத் துரோகியாய்!
போராடி மடிவோம்...!!
உணவைப் பொங்கியே!
ஓடிய நாட்கள் போதும் !!
தமிழினத்தின் விடியலுக்காக!
உணர்ச்சியால் பொங்குவோம்!!
உணர்வை மேம்படுத்தி!
உயிரையும் உரிமையும் காக்க!
உறுமுகின்ற புலியாக!
உலகறியப் பொங்குவோம்!!
!
-க.அருணபாரதி

க.அருணபாரதி