அருகில் வா
ரகசியம் சொல்வேன்
இதோ பார்
கோவிலின் கோபுரக்கலசம்
அண்டவெளி நிசப்த உண்மை
சுடர்விடும் ஒளிவிளக்கு
கல்தச்சன் உளிச்சலங்கை காட்டும்
கற்சிலை சுவர்க்கம்
வெளவால் புறாக்கள்
வழிந்திடும் எண்ணெய் சுவர்கள்
விபூதிப்பட்டை வெண்மை செம்மை
கோடுகள் கோலங்கள்
சம்சாரிகள் சந்நியாசிகள்
பண்டாரங்கள் பசுக்கள்
குமரிகள் குழந்தைகள்
கோட்டான்கள் சாத்தான்கள்
நிரம்பி வழியும் மனசுக்குள்
எரியும் திரி விளக்குகள்
இன்றோ நாளையா என்றோ
உடையும் தீச்சுடர் நாக்குகள்
முள்ளாய் குத்தும் முட்புதர் எண்ணங்கள்
திரும்பிப்போ
எதுவும் எடுக்காமல்
ஜெயானந்தன்