காருண்யன் - !
என் கொள்ளுத்தாத்தா !
கொள்ளுப்பாட்டிக்கு விளாசிய சவுக்கை !
என் பாட்டி கண்டிருந்தாள் !
தாத்தாவும் சிறு களியையோ !
தன் இடுப்பு பெல்ட்டையோ !
பாவித்திருக்கக்கூடும்! !
அப்பா பாவம்...............வெகு அப்பாவி !
ஆதிக்கம் அடக்குமுறைகள் அறியாது !
அமைதியாய் வாழ்ந்தவள் அம்மா !
என் மனைவி விவாதிக்கத்தெரிந்தவள் !
அவள் தர்க்க நியாயப்பொறிகளிலே !
என் கசடுகள் தாமே பொசுங்கும் !
என்மகள் நாளை என் செய்வாள் !
என்றெல்லாம் அனுமானிக்க முடியாது !
ஆனால் யார் கண்டது? !
அவள் என் பெயர்த்தி !
சொடுக்கும் சவுக்கைக் காணநேரலாம்
காருண்யன்