1.முயற்சி!
சிணுங்குகிறது!
கை கால்களை ஆட்டுகிறது!
பிறகு அழுகிறது!
எதுவும் நடவாத போது!
தொட்டிலில் இருந்து!
தானே இறங்குகிறது!
குழந்தை!
2.கண்ணாமூச்சி!
முழுவதும் மறையாமல்!
கொஞ்சம் தெரியும்படி!
ஒளிய வேண்டியிருக்கிறது!
குழந்தைகளுடன்!
கண்ணாமூச்சி விளையாடுகையில்.!
3.செல்லப்பெயர்!
பெயர்கள் எல்லாம் வழக்கொழிந்து!
மனிதர்கள் எல்லோரும்!
'பார் கோடிங்' செய்யப்பட்ட பிறகும்!
நிலைத்திருக்கும்!
செல்லம், தங்கம், கண்ணுகுட்டி!
போன்ற பெயர்கள்!
-ஜெ.நம்பிராஜன்

ஜெ.நம்பிராஜன்